/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓய்வூதிய விதிகள் செல்லுபடியாக்கல் சட்டம்: ஓய்வூதியர்களை பிரிப்பதாக குற்றச்சாட்டு

UPDATED : டிச 24, 2025 07:14 AM
ADDED : டிச 24, 2025 05:08 AM

வடவள்ளி: தமிழக அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஓய்வூதியர் தின விழா, வடவள்ளி காமாட்சியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் பலராமன் தலைமை வகித்தார்.
ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ஞானசேகரன் பேசியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள, ஓய்வூதிய விதிகள் செல்லுபடியாக்கல் சட்டம், ஓய்வூதியர்களை ஓய்வு பெற்ற தேதியின் அடிப்படையில் பிரிக்கிறது.
இந்த சட்டம், ஓய்வூதியர்களை முன்னாள், இன்னாள் மற்றும் எதிர்கால ஓய்வூதியர்கள் எனப்பிரித்து, முன்னாள் ஓய்வூதியர்களுக்கு பலன்கள் கிடைக்காமல் தடுக்கிறது.
புதிதாக அமல்படுத்த உள்ள, 8வது ஊதியக்குழு பரிந்துரையில் பழைய ஓய்வூதியர், புதிய ஓய்வூதியர்கள் என, பிரிக்காமல் அனைத்து ஓய்வூதியர்களும் பலன் பெறும் வகையில் திருத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் சிங்காரவேலு, நாகராஜன், உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் வசந்த்குமார், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் அமைப்பு நிர்வாகி இன்னாச்சிமுத்து உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.