/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் துவக்கம்
/
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் துவக்கம்
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் துவக்கம்
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் துவக்கம்
ADDED : செப் 11, 2025 09:38 PM

கோவை; தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நியாயம் கேட்டும், மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை, கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று துவக்கினர்.
ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்த சிறப்பு பென்ஷன், 500 முதல் 700 ரூபாய் வழங்குதல், சட்டப்பூர்வ சிறப்பு பென்ஷன் 6,750 வழங்க வேண்டும்.
அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு அதிகபட்ச தொகை பென்ஷனாக வழங்குவது போல், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பென்ஷனர்களுக்கு வழங்குவதில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதை நிறைவேற்ற வேண்டும் என்பற்காக நேற்று நியாயம் கேட்டு மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மேற்கொண்டனர்.