/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹேண்ட்பால் போட்டி; மாருதி கல்லுாரி வெற்றி
/
ஹேண்ட்பால் போட்டி; மாருதி கல்லுாரி வெற்றி
ADDED : செப் 18, 2025 10:30 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி வளாகத்தில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான ஹேண்ட் பால் போட்டி மூன்று நாட்கள் நடந்தது.
கோவை மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி, சென்னை ஒய்.எம்.சி.ஏ., திருச்செந்துார் டாக்டர் சிவந்தி ஆதித்தனார், சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன், திருநெல்வேலி புனித ஜான்ஸ், திருச்சி ஜென்னிஸ், கரூர் சேரன், கோவிலுார் ஆண்டவர், விழுப்புரம் மாஸ் உள்ளிட்ட உடற்கல்வியியல் கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தாஜி துவக்கி வைத்தார். பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி அணி, சென்னை ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி அணியை, 33:30 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி செயலாளர் சுவாமி வீரகானந்தர் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.