/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் கிடங்கில் தீ விபத்து; உதவி பொறியாளர் 'சஸ்பெண்ட்'
/
வெள்ளலுார் கிடங்கில் தீ விபத்து; உதவி பொறியாளர் 'சஸ்பெண்ட்'
வெள்ளலுார் கிடங்கில் தீ விபத்து; உதவி பொறியாளர் 'சஸ்பெண்ட்'
வெள்ளலுார் கிடங்கில் தீ விபத்து; உதவி பொறியாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 19, 2025 10:20 PM
கோவை; வெள்ளலுார் குப்பை கிடங்கில் இரு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
குப்பை கிடங்கை கண்காணிக்க பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தீ விபத்து தொடர்பாக, உதவி பொறியாளர் ஒருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்; ஒருவருக்கு விளக்கம் கேட்டு 'மெமோ' அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி துணை கமிஷனர் குமரேசனிடம் கேட்டபோது,''குப்பை கிடங்கில் சரியாக கவனிக்காத காரணங்களுக்காக, உதவி பொறியாளர் பாலுசாமி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுளளார். மற்றொரு உதவி பொறியாளர் ஜீவராஜிற்கு 'மெமோ' அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.