/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.என்.எல். ‛சிம் கார்டு தபால் நிலையத்தில் விற்பனை
/
பி.எஸ்.என்.எல். ‛சிம் கார்டு தபால் நிலையத்தில் விற்பனை
பி.எஸ்.என்.எல். ‛சிம் கார்டு தபால் நிலையத்தில் விற்பனை
பி.எஸ்.என்.எல். ‛சிம் கார்டு தபால் நிலையத்தில் விற்பனை
ADDED : செப் 19, 2025 10:18 PM
கோவை; தபால் துறை, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின், சிம் கார்டுகளை விற்பனை செய்யவும், மொபைல் திட்டங்களை ரீசார்ஜ் செய்யவும், புதிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
டில்லியில், தபால் துறையின் குடிமை மைய சேவைகள் பொது மேலாளர் மனிஷா பன்சால் பாதல், பி.எஸ்.என்.எல். விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்- நுகர்வோர் இயக்க முதன்மை பொது மேலாளர் தீபக் கார்க் ஆகியோர், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்திய தபால் துறையின், 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்களின் பரந்த கட்டமைப்பை பயன்படுத்தி, பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகளின் விற்பனை மற்றும் மொபைல் ரீசார்ஜ் சேவைகளை, நாடு முழுவதும் வழங்க, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, தபால் துறை கிளைகள், பி.எஸ்.என்.எல். சேவைகளை வழங்கும்.
இணையதள இணைப்பு குறைவாக உள்ள, நாட்டின் பல்வேறு கிராமப்புற மற்றும் தொலைதுாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு சேவைகள் எளிதாகவும், மலிவு விலையிலும் கிடைக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.