/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுறவு பணியாளர் சிறப்பு பயிற்சி
/
கூட்டுறவு பணியாளர் சிறப்பு பயிற்சி
ADDED : டிச 19, 2025 05:55 AM

கோவை: கோவை மண்டலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களில், செயலாளர்கள் தவிர்த்து, இதர பணியாளர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், மண்டல இணைப்பதிவாளர் அழகிரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முதல் நாளில், கூட்டுறவு கடன் துறையின் வளர்ச்சிக்கான மாநில அரசின் முன்முயற்சிகள், இ-கிசான் கிரெடிட் கார்டு கடன் செயலாக்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களை லாபம் ஈட்டும் சங்கங்களாக மாற்றுவதற்கான வணிக மேம்பாட்டு திட்டம் குறித்து விளக்கப்பட்டது. இரண்டாம் நா ளில், சொத்துக்களின் வகைப்பாடு, வைப்புத்தொகை வசூல், பல்வேறு வகையான கடன்கள் , கடன் மீட்பு உத்தி, பொது சேவை மையங்கள், வேளாண் சேவை மையம், விரிவாக்கத் திட்டமிடல் குறித்து தெரிவிக்கப்பட்டது.
மூன்றாம் நாளில், வேளாண் உள்ளீடுகள் சந்தைப்படுத்தல், இயற்கை விவசாயக் கூட்டுறவுகள், கிடங்குகளை பயன்படுத்துதல், கணக்கு மற்றும் தணிக்கை குறித்து விளக்கப்பட்டது. கோவை சரக துணைப்பதிவாளர் தினேஷ், பொள்ளாச்சி சரக துணைப்பதிவாளர் வடிவேல் உட்பட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

