/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய ஸ்கேட்டிங் போட்டி கோவை வீரருக்கு தங்கம்
/
தேசிய ஸ்கேட்டிங் போட்டி கோவை வீரருக்கு தங்கம்
ADDED : டிச 19, 2025 05:55 AM

பி.என்.பாளையம்,
ஹரியானா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான 'ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்' போட்டி நடந்தது. இந்தியாவில், 16 மண்டலங்களில் இருந்தும், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இப்போட்டியில், 9 வயதுக்குட்பட்ட வீரர்கள் பிரிவில், கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அபிமன்யு இரண்டு பிரிவுகளில் கலந்துகொண்டு அசத்தியுள்ளார். அதாவது, டைம் டிரையல் பிரிவில்(300 மீ.,), 32.30 வினாடிகளில் கடந்து தங்க பதக்கமும், ரோடு ஒன் லேப் ரேஸ் பிரிவில்(500 மீ.,), 36.44 வினாடிகளில் கடந்து தங்க பதக்கமும் வென்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

