/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.10 லட்சம் மோசடி கான்ட்ராக்டர் கைது
/
ரூ.10 லட்சம் மோசடி கான்ட்ராக்டர் கைது
ADDED : செப் 17, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்; போத்தனுார் அடுத்த சீனிவாசா நகரை சேர்ந்தவர் வாசுதேவ், 43. இவர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். சூலுார், இடையர்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கேசவன், 34 என்பவர், 41.85 லட்சத்தில் கட்டித்தர ஒப்பந்தம் போடப்பட்டது.
இதுவரை 39.5 லட்சம் ரூபாய் கேசவனுக்கு கொடுக்கப்பட்டது. ஒப்பந்தப்படி, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணியை முடிக்காமல் காலதாமதம் செய்துள்ளார்.
இதுகுறித்து கேட்ட போது, விரைவில் முடித்து தருவதாக கூறிய கேசவன், மீண்டும் பணியை துவக்கவில்லை. சுந்தராபுரம் போலீசில் வாசுதேவ் புகார் செய்தார். விசாரித்த போலீசார், கேசவனை கைது செய்தனர்.