/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு; சைக்கிள் ஓட்ட வைத்து பரிசோதனை
/
கிராம உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு; சைக்கிள் ஓட்ட வைத்து பரிசோதனை
கிராம உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு; சைக்கிள் ஓட்ட வைத்து பரிசோதனை
கிராம உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு; சைக்கிள் ஓட்ட வைத்து பரிசோதனை
ADDED : செப் 17, 2025 06:15 AM

பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், 21 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், நேரடியாகவும், தபால் வாயிலாகவும் பெறப்பட்டன.
மொத்தம், 754 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் மற்றும், வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக, 93 பேரிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. அவை பரிசீலனை செய்யப்பட்டு, 632 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நேற்று, பணியிடங்களுக்கான எழுத்து மற்றும் திறனறி தேர்வு தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
முதற்கட்டமாக, விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து, எழுத்து தேர்வு, வாசிப்பு தேர்வு நடந்தது. திறனறி தேர்வில், சைக்கிள் ஓட்ட வைத்து பரிசோதனை செய்தனர்.
வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாவிட்டாலும் மதிப்பெண் பட்டியல் கட்டாயமாக இருக்க வேண்டும். 21 வயது முதல், 37 வயது வரை உள்ளவர்கள் தகுதியாக கருதப்படுகிறது.
தினமும், 120 பேருக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இன்று (நேற்று) முதல், 20ம் தேதி வரை எழுத்து, வாசிப்பு, திறனறி தேர்வுகள் நடக்கின்றன.
தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. வரும், அக்., 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை நேர்முக தேர்வு நடைபெறுகிறது.
இவ்வாறு, கூறினர்.
ஆனைமலை தாலுகாவில், ஐந்து கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு, 360 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 243 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அங்கு, வரும், 19ம் தேதி எழுத்து, வாசிப்பு, திறனறி தேர்வுகள் நடைபெறும் என, வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.