/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா கொடிசியாவில் 24ல் துவங்குகிறது
/
கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா கொடிசியாவில் 24ல் துவங்குகிறது
கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா கொடிசியாவில் 24ல் துவங்குகிறது
கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா கொடிசியாவில் 24ல் துவங்குகிறது
ADDED : டிச 19, 2025 05:10 AM

கோவை: 'கொடிசியா' சார்பில், கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா, வரும் 24ம் தேதி துவங்கி 9 நாட்கள் நடக்கிறது.
இதுதொடர்பாக, கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், “11வது ஆண்டாக ஷாப்பிங் திருவிழா நடக்கிறது. கடந்த ஆண்டை விட கூடுதல் ஸ்டால்கள் அமைகின்றன. தினமும் மாலை 6:30 மணி முதல் சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன. கடைகளை விட குறைந்த விலையில் ஷாப்பிங் செய்யலாம். ஏராளமானவற்றில் இருந்து தேர்வு செய்யலாம்” என்றார்.
ஷாப்பிங் திருவிழா தலைவர் நந்தகோபால் கூறியதாவது:
வீட்டு உபயோக பொருட்கள், ஸ்டேசனரி, தங்க, வைர நகைகள், இயற்கை உணவுகள், காலணிகள், ஓவியங்கள், ஜவுளி ஆடை வகைகள், பேஷன் உபகரணங்கள், சமையலறை பொருட்கள், புத்தகங்கள், உடற்பயிற்சி சாதனங்கள் என, நுகர்வோருக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் அளவுக்கு, 9 மாநிலங்களில் இருந்து 500 ஸ்டால்கள் அமைகின்றன. பர்னிச்சருக்கு என பிரத்யேக அரங்கு, காதி கிராமத் தொழில் ஆணையத்தின் 50 அரங்குகள், மத்திய ஜவுளித் துறையின் கைவினை பொருட்கள் 20 அரங்களில் இடம்பெறுகிறது. உணவுப் பிரியர்களுக்காக 12 ஸ்டால்கள் அமைகின்றன.
விளையாட்டு இம்முறை குழந்தைகளோடு, பெரியவர்களும் விளையாடி மகிழும் வகையில், வாட்டர் கேம்ஸ், டேபிள் கேம்ஸ், கார்னிவல் கேம்ஸ், ஒட்டக சவாரி, சிமுலேட்டர்கள், ரோபோடிக் பறவைகள், கோஸ்ட் ஹவுஸ், மலர் கண்காட்சி உட்பட 50 வகையான விளையாட்டுகள் உள்ளன.
திருவிழாவின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், ஒளி அலங்காரம் இடம்பெறுகிறது. செல்பி பாய்ன்ட்டில் படம் எடுத்து மகிழலாம். காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இது, கோவை மக்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை தரும். கூடவே பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவித்து மகிழலாம்.
இவ்வாறு, நந்தகோபால் தெரிவித்தார்.
ஷாப்பிங் திருவிழா துணைத்தலைவர் வரதராஜன், கொடிசியா செயலாளர் யுவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

