/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காருண்யா பல்கலையில் கிறிஸ்துமஸ் விழா
/
காருண்யா பல்கலையில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 19, 2025 05:10 AM

கோவை, டிச. 19-
கோவை காருண்யா பல்கலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக துவங்கியது. வண்ண ஒளிவிளக்குகள், அலங்காரங்கள் மற்றும் உற்சாகமான சூழலில் ஆராதனை, கலை நிகழ்வுகளுடன் கொண்டாட்டங்கள் துவங்கியது.
வளாகத்தில் 39 அடி உயரத்தில் பிரமாண்ட ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் திறக்கப்பட்டது. துவக்கவிழா நிகழ்வில், பல்கலை துணைத்தலைவர் சாமுவேல் தினகரன் தலைமை உரையாற்றி ஒற்றுமை, சேவையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
தொடர்ந்து, பல்கலை வேந்தர் பால் தினகரன் ஆசிர்வாத ஜெபம் செய்தார். முக்கிய நிகழ்வாக, அன்பு என்றும் வெல்லும் என்பதை கருப்பொருளாக கொண்டு, மேகாப்ளே-2025 என்ற தலைப்பில் மேடை நாடகம் அரகேற்றப்பட்டது. மாணவர்களின் நடிப்பு, இசை, நடனம் மற்றும் காட்சியமைப்புகள் வாயிலாக அன்பு, நம்பிக்கை மற்றும் மீட்பு என்ற ஆழமான செய்தி அழகாக எடுத்துரைக்கப்பட்டது.

