/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியவர் மூளைச்சாவு உடல் உறுப்பு தானம்
/
முதியவர் மூளைச்சாவு உடல் உறுப்பு தானம்
ADDED : டிச 19, 2025 05:57 AM

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 70 வயது முதியவர் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து, உறவினர்கள் ஒப்புதலுடன் உடல் உறுப்பு தானம் அளிக்கப்பட்டது.
பல்லடம், நத்தக்காடு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். கடந்த, 15ம் தேதி வீட்டில் நிலைத்தடுமாறி விழுந்து தலையில் பலத்த காயத்துடன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர்.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய வழிகாட்டுதலின்படி, கல்லீரல் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் ஒன்று அரசு மருத்துவக்கல்லுாரிக்கும், மற்றொன்று தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் அரசு மருத்துவக்கல்லுாரிக்கும் தானமாக அனுப்பிவைக்கப்பட்டது.
மகாலிங்கம் உடலுக்கு, மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, ஆர்.எம்.ஓ. சரவணப்பிரியா, செவிலியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தி சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.

