/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம்
/
அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம்
ADDED : ஜன 01, 2026 05:40 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் திண்ணை பிரசாரம் செய்தார்.
பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட மேற்கு ஒன்றிய பகுதிகளான டி.நல்லிக்கவுண்டம்பாளையம், தேவம்பாடி, ஜலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது.
அ.தி.மு.க., பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் ஆகியோர் பேசினர்.
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராஜ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என, பலர் பங்கேற்றனர்.
இதில், கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், தி.மு.க., அரசால் கடந்த, 4.5 ஆண்டுகளில், பொதுமக்கள் விவசாயிகள் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என்பதை எடுத்துக்கூறி பிரசாரம் செய்தனர்.

