/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனஉயிரினங்கள் குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை
/
வனஉயிரினங்கள் குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை
வனஉயிரினங்கள் குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை
வனஉயிரினங்கள் குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை
ADDED : ஜன 01, 2026 05:40 AM
வால்பாறை: வன உயிரினங்கள் பற்றி, தவறான தகவல்களை வெளியிட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கோவை மாவட்ட எல்லையில் வால்பாறை சுற்றுலாதலம் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு மாவட்டங்கள், நகரங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவர்கள் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ரசிக்கின்றனர்.
வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கை:
வால்பாறை பகுதியில், தாய்புலி ஒன்று ஒரு குட்டியுடன் இருப்பது போன்ற புகைப்படம், சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. இப்புகைப்படம் செயற்கை நுண்ணறிவு வாயிலாக போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வேண்டுமென்றே போலியான புகைப்படங்கள் வாயிலாக, சிலர் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவது சைபர் கிரைம் குற்றமாகும்.
இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொதுமக்கள் இது போன்ற, வன உயிரினம் குறித்த சந்தேகமளிக்ககூடிய தகவல்கள் பரவினால், தங்கள் பகுதியில் உள்ள வனத்துறை பணியாளர்களிடம் நேரில் புகார் தெரிவித்து, உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

