/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பொதுமக்களுக்கு இடையூறின்றி வாகனங்களை சோதனையிடணும்'
/
'பொதுமக்களுக்கு இடையூறின்றி வாகனங்களை சோதனையிடணும்'
'பொதுமக்களுக்கு இடையூறின்றி வாகனங்களை சோதனையிடணும்'
'பொதுமக்களுக்கு இடையூறின்றி வாகனங்களை சோதனையிடணும்'
ADDED : ஏப் 14, 2024 10:50 PM
கோவை;வாகனத் தணிக்கை, பரிசுபொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கண்காணிப்பது தொடர்பான, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், மாநில தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவது குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், உள்ளிட்ட அனைவரும், அனைத்து பகுதிகளிலும், வாகன சோதனையை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடக்கும் பணப்பரிமாற்றம் குறித்து, அமலாக்கத்துறை அலுவலர்கள், வங்கி ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும்.
வங்கிகளில் வழக்கத்துக்கு மாறாக நடக்கும் பணப்பரிவர்த்தனை குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், வாகனத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆம்புலன்ஸ், அரசு வாகனங்களில் முறையற்ற வழியில், பணம் கொண்டு செல்லப்படுவது குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கோவை லோக்சபா தொகுதி செலவினப்பார்வையாளர்கள் கீது படோலியா, உம்மேபர்டினா அடில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதி செலவினப்பார்வையாளர்கள் சிவ் பிரதாப் சிங், கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

