/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளைஞருக்கு அடி, உதை; கொலை மிரட்டல் புதுப்பேட்டையில் தி.மு.க.,வினர் அடாவடி
/
இளைஞருக்கு அடி, உதை; கொலை மிரட்டல் புதுப்பேட்டையில் தி.மு.க.,வினர் அடாவடி
இளைஞருக்கு அடி, உதை; கொலை மிரட்டல் புதுப்பேட்டையில் தி.மு.க.,வினர் அடாவடி
இளைஞருக்கு அடி, உதை; கொலை மிரட்டல் புதுப்பேட்டையில் தி.மு.க.,வினர் அடாவடி
ADDED : டிச 28, 2025 05:13 AM
சென்னை: பொது இடத்தில் வாலிபரை தி.மு.க.,வினர் அடித்து, உதைத்ததோடு, வட்ட செயலர் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையில், இரு நாட்களுக்கு முன், போரூரைச் சேர்ந்த ஒரு வாலிபர், இருசக்கர வாகனத்தில் சென்றார். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, தி.மு.க., நிர்வாகி கார் மீது, இருசக்கர வாகனம் லேசாக மோதியது.
இதில் ஆத்திரமடைந்த தி.மு.க., நிர்வாகியும், அவரது ஆதரவாளர்களும், வாலிபரிடம் வாக்குவாதம் செய்தனர். வாலிபரை சகட்டுமேனிக்கு அடித்து, உதைத்தனர். இதில், அவரது முகம், வயிற்றில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து அறிந்த, சேப்பாக்கம் பகுதி, 63வது வட்ட செயலர் பிரபாகரன், தன் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். சமரசம் பேசுவார் என எதிர்பார்த்த நிலையில், அவரும் தன் பங்கிற்கு அந்த வாலிபரை ஆபாசமாக திட்டியதோடு, 'உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' என, மிரட்டல் விடுத்தார். இதெல்லாம் அங்கிருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் முன்னிலையதான் நடந்தது. அவரும், அடிவாங்கிய வாலிபரை திட்டி, அங்கிருந்து செல்லும்படி கூறினார்.
இதுகுறித்து, எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனிடம் கேட்டபோது, ''காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, வாலிபர் தகவல் அளிக்கவில்லை. சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் ஏட்டு, இருதரப்பையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். முறையான புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

