ADDED : டிச 28, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்: புழல் வெஜிடேரியன் நகரில், நேற்று மாடுகள் மேய்ச்சலுக்கு சாலை வழியாக சென்றன. அப்போது, காற்று பலமாக வீசியதால், மின்சார கம்பத்தில் இருந்து மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி, திடீரென கம்பி அறுந்து, மாட்டின் மேல் விழுந்தது.
இதில், எருமை மாடு ஒன்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது.
மாதவரம் கால்நடை துறையினர் விரைந்து வந்து, மின்சாரம் பாய்ந்து பலியான மாட்டை மீட்டு, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

