/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது அருந்த போன் திருடிய வாலிபர் கைது
/
மது அருந்த போன் திருடிய வாலிபர் கைது
ADDED : டிச 15, 2025 04:30 AM
கோயம்பேடு: கோயம்பேடில் மது அருந்துவதற்காக, தொடர்ச்சியாக மொபைல் போன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 23; நெற்குன்றத்தில் உள்ள விடுதியில் தங்கி, ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், கடந்த அக்., மாதம், விடுதியில் துாங்கி கொண்டிருந்தபோது விடுதியில் புகுந்த மர்ம நபர், அசோக்குமாரின் மொபைல் போனை திருடிச் சென்றார்.
அடுத்த சில நாட்களில், 10க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் திருடு போனதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரித்த கோயம்பேடு போலீசார், மொபைல் போன் திருட்டில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 24, என்பவரை நேற்று கைது செய்தனர்.
இவர், கோயம்பேடு பகுதியில் மொபைல் போன்களை திருடி விற்று, அந்த பணத்தில் மது அருந்துவதும், கஞ்சா புகைப்பதையும் வழக்கமாக வைத்திருந்தது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

