/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல கூட்டத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள்: தீர்வு கிடைக்காததால் கவுன்சிலர்கள் புலம்பல்
/
மண்டல கூட்டத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள்: தீர்வு கிடைக்காததால் கவுன்சிலர்கள் புலம்பல்
மண்டல கூட்டத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள்: தீர்வு கிடைக்காததால் கவுன்சிலர்கள் புலம்பல்
மண்டல கூட்டத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள்: தீர்வு கிடைக்காததால் கவுன்சிலர்கள் புலம்பல்
ADDED : டிச 15, 2025 04:30 AM
மணலி: மணலி மண்டல குழு கூட்டத்தை மாநகராட்சி அதிகாரிகளை தவிர, பிற துறை அதிகாரிகள் புறக்கணிப்பதால் கவுன்சிலர்கள் புலம்பி வருகின்றனர்.
மணலி மண்டலத்தின், 42வது கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மண்டல பொறுப்பு உதவி கமிஷனர் தேவேந்திரன், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 21வது வார்டு, பாடசாலை தெருவில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு, 1 கோடி ரூபாய் செலவில், இரண்டு 'ஆடிட்டோரியம்' கட்டும் பணி உட்பட, 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேறிய தீர்மானங்கள், வார்டின் அடிப்படை தேவைகள் குறித்து, கவுன்சிலர்கள் பேசியதாவது:
நந்தினி, தி.மு.க., 15வது வார்டு: மணலிபுதுநகர், 80 அடி சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதையில் தனி நபர் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. அதை அகற்ற நடவடிக்கை வேண்டும். பருவமழையின்போது மழை நீரை தேக்கி வைக்க நடவடிக்கை இல்லை.
ஸ்ரீதரன், அ.தி.மு.க., 18வது வார்டு: சாலைமா நகர் அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்குவதால், குழந்தைகள் அவதியுறுகின்றனர். சாலையின் நடுவில் அமைந்துள்ள மின் மாற்றியை அகற்ற, கடந்த ஓராண்டாக கோரி வருகிறேன்.
ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் உள்ளது. ஏகாம்பரம் தெருவில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும். மழைகாலத்தில் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர்.
காசிநாதன், தி.மு.க., 19வது வார்டு: எனது வார்டில், ஹிந்து - முஸ்லிம் சுடுகாடு அமைத்து தர வேண்டும். வார்டு முழுதும் பெரும்பாலான சாலைகள் போடப்படவில்லை. தேர்தலுக்கு முன்பாக போட வேண்டும். இந்த கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கின்றனர்.
பிற துறை அதிகாரிகள் பங்கேற்காததால், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடிவதில்லை. குறிப்பாக வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்பதில்லை.
குறிப்பாக, மணலி மண்டல குழு கூட்டத்தை மாநகராட்சி அதிகாரிகளை தவிர, பிற துறை அதிகாரிகள் புறக்கணிப்பதால், ஒருங்கிணைப்பின்றி பணிகளை முடிப்பதில் தொய்வு ஏற்படுகிறது என, கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

