/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நுங்கம்பாக்கத்தில் நாளை மகளிர் மாநில கருத்தரங்கம்
/
நுங்கம்பாக்கத்தில் நாளை மகளிர் மாநில கருத்தரங்கம்
ADDED : செப் 21, 2025 12:33 AM
சென்னை, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் மற்றும் விமன் சேவா டிரஸ்ட் சார்பில், மகளிர் மாநில கருத்தரங்கு மற்றும் பயிற்சி, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி வளாகத்தில், நாளை நடக்க உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத் தலைவி, கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
மத்திய மற்றும் மாநில அரசின் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து, தொடர்புடைய அதிகாரிகள் வாயிலாக, பெண்களுக்கு எடுத்துரைக்கப்படும். சோலார் விளக்கு தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். நிகழ்ச்சியில், மகளிர் விருதுகள் வழங்கப்படும்.
மேலும், மகளிர் தொழில் முனைவுக்கான அனைத்து தகவல்களும் அடங்கிய, தொழில் மலர் கருத்தரங்கில் வெளியிடப்படும். கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவியருக்கு, இ - சான்றிதழ் வழங்கப்படும்.
முன்பதிவிற்கு 93610 86551 / 78717 02700 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இதில் பெண்கள் மற்றும் மாணவியர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு அனுமதி இலவசம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.