/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராமச்சந்திரா மருத்துவமனையில் மாணவர்கள், ஊழியர்கள் கவுரவிப்பு
/
ராமச்சந்திரா மருத்துவமனையில் மாணவர்கள், ஊழியர்கள் கவுரவிப்பு
ராமச்சந்திரா மருத்துவமனையில் மாணவர்கள், ஊழியர்கள் கவுரவிப்பு
ராமச்சந்திரா மருத்துவமனையில் மாணவர்கள், ஊழியர்கள் கவுரவிப்பு
ADDED : செப் 21, 2025 12:33 AM

போரூர் : போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த பல்கலை தின விழாவில் மாணவ - மாணவியர் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பல்கலை தின விழா, மருத்துவமனை வளாக அரங்கில் நேற்று நடந்தது.
இதில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சிறப்பான இடம் பிடித்த வீணா மற்றும் சஞ்சனா ஆகிய மாணவியருக்கு, தலா, மூன்று தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும் 35 மாணவ - மாணவியருக்கு தங்கப் பதக்கங்கள்; நிறுவனத்தில் 10 முதல் 40 ஆண்டுகள் பணியாற்றிய, 333 ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
துணைவேந்தர் உமா சேகர் மற்றும் மகப்பேறு மருத்துவ துறை பேராசிரியர் உஷா ராணி ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது, கதிரியக்கவியல் துறை பேராசிரியர் வெங்கடசாய் என்பவருக்கு மாணவர் வழிகாட்டி விருதும் வழங்கப்பட்டன.
நிதித்துறை துணை பொது மேலாளர் ஏழுமலை, உடற்கூறு இயல் துறை உதவியாளர்கள் ஆரோக்கியநாதன், சுப்பிரமணியன், டேவிட் ஆகியோருக்கு, சிறந்த சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், ஸ்ரீ ராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புது இணையதளம் வெளியிடப்பட்டது.