/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலம்பாக்கத்தில் சுடுகாடு மாயம்
/
கோவிலம்பாக்கத்தில் சுடுகாடு மாயம்
ADDED : டிச 25, 2025 05:43 AM

கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கத்தில், மயானத்திற்கு ஒதுக்கிய 26 சென்ட் பரப்பளவு கொண்ட இடம், தனி நபர்களின் பெயரில் பட்டா மாற்றப்பட்டுள்ளதாக, பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சோழிங்கநல்லுார் வட்டம், சுண்ணாம்புகொளத்துார் கிராமத்தில், எஸ்.கொளத்துார் பிரதான சாலையில் உள்ள சர்வே எண்: 389/1ல் மயானம் என, 1951ம் ஆண்டு கிராம பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர, 1986ம் ஆண்டு, யு.டி.ஆரில் இருந்து, கணினிமயமாக்கப்பட்ட பின்பும், குறிப்பிட்ட சர்வே எண் மயானம் என்றே குறிப்பிடுகிறது.
இதுகுறித்து, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கூறியதாவது:
கடந்த 2016ம் ஆண்டில் இருந்து, சிலரின் பெயரில் பட்டா மாறுதலாகி உள்ளதோடு, அங்கு அவர்கள் வணிக கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர்.
கலெக்டர் தலையிட்டு, ஆக்கரமிப்பில் உள்ள மயானத்திற்கான இடத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

