/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார்கள் மீது மோதிய லாரி: இ.சி.ஆரில் வாகன நெரிசல்
/
கார்கள் மீது மோதிய லாரி: இ.சி.ஆரில் வாகன நெரிசல்
கார்கள் மீது மோதிய லாரி: இ.சி.ஆரில் வாகன நெரிசல்
கார்கள் மீது மோதிய லாரி: இ.சி.ஆரில் வாகன நெரிசல்
UPDATED : டிச 25, 2025 07:59 AM
ADDED : டிச 25, 2025 05:45 AM

கானத்துார்: டிப்பர் லாரி மோதி, இரண்டு கார்கள் சேதமடைந்ததால், இ.சி.ஆர்., உத்தண்டியில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இ.சி.ஆர்., உத்தண்டியில், நேற்று காலை, கபில்தேவ் என்பவர் ஓட்டிச்சென்ற கார், அங்குள்ள சிக்னலில் திரும்புவதற்காக மெதுவாக சென்றது. அப்போது, கல்பாக்கத்தில் இருந்து சென்னை நோக்கி மண் ஏற்றி சென்ற லாரி, கபில்தேவ் மற்றும்ஜெரிக் என்பவர் ஓட்டிச்சென்ற கார்கள் மீது மோதியது.
இதில், இரண்டு கார்களும் சேதமடைந்தன. இதனால், சென்னை மார்க்க சாலையில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கானத்துார் போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.