/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை வெட்டு பணிக்கான தடை நீக்கம்
/
சாலை வெட்டு பணிக்கான தடை நீக்கம்
ADDED : டிச 19, 2025 05:15 AM
சென்னை: குடிநீர் வாரியம், மின் வாரியம், சேவை துறைகள் உள்ளிட்டவை, பல்வேறு பணிகளுக்கு சாலையை தோண்டுவது உண்டு.
மழைக் காலத்தில், சாலையில் தோண்டினால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவர் என்பதால், வடகிழக்கு பருவமழையொட்டி, சென்னை மாநகராட்சியில் சாலை வெட்டு பணிக்கு, கடந்த மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது.
சமீபத்தில் பெரிய அளவிலான மழை பொழிவு இல்லை. அதேநேரம், பல்வேறு பணிகள், சாலை வெட்டு தடையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, சென்னை மாநகராட்சியில் சாலை வெட்டு பணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, மாநகராட்சி நீக்கியுள்ளது.
மேலும், மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் சாலை வெட்டு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

