/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீபாவளிக்காக ஆர்.எம்.கே.வி.,யில் 15 புதிய பட்டு ரகங்கள் அறிமுகம்
/
தீபாவளிக்காக ஆர்.எம்.கே.வி.,யில் 15 புதிய பட்டு ரகங்கள் அறிமுகம்
தீபாவளிக்காக ஆர்.எம்.கே.வி.,யில் 15 புதிய பட்டு ரகங்கள் அறிமுகம்
தீபாவளிக்காக ஆர்.எம்.கே.வி.,யில் 15 புதிய பட்டு ரகங்கள் அறிமுகம்
ADDED : செப் 12, 2025 02:46 AM

சென்னை, ஆர்.எம்.கே.வி., வெட்டிங் சில்க்ஸ் நிறுவனத்தின், 'வீவ்ஸ் அண்ட் வொண்டர்ஸ்' பண்டிகை கால கலெக் ஷன் அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது.
தேனாம்பேட்டை தனியார் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில், தீபாவளி உட்பட எதிர் வரும் பண்டிகையையொட்டி, ஜப்பானிய கலை மற்றும் இந்திய பாரம்பரியத்துடன் வடிவமைக்கப்பட்ட, 15 புதிய பட்டு புடவை ரகங்களை, குழுமத்தின் இயக்குநர் சங்கர் குமாரசாமி வெளியிட்டார்.
பின், சங்கர் குமாரசாமி பேசியதாவது:
ஆர்.எம்.கே.வி., வெட்டிங் சில்க்ஸ் நிறுவனம், தன் முதல் கடையை, 1924ல் திருநெல்வேலியில் துவங்கியது.
வாடிக்கையாளர்களின் அன்பு மற்றும் தொடர் ஆதரவால் நுாற்றாண்டு கடந்து, எட்ட முடியாத சிகரத்தை அடைந்துள்ளோம்.
இது, எங்கள் நெசவாளர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பிற்கு கிடைத்த வெற்றி. 110க்கும் மேற்பட்ட பிரத்யேக பட்டு புடவை ரகங்களை அறிமுகம் செய்த, ஆர்.எம்.கே.வி., 101ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாகவும், எதிர்வரும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகையையொட்டி, 15 புதிய பட்டு புடவை ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த புடவைகள் ஜப்பானிய கலை மற்றும் இந்திய கலாசாரங்களை மையப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, ஷாஷிகோ ரிவர்சிபிள், ஜப்பான் கோர்வை, மவுண்ட் புஜி, நேச்சுரல் பீச் கிரேடியன்ட், வான் கோ லினோ, ராசலீலா உள்ளிட்ட 15 புதிய பட்டு புடவைகள் பாரம்பரியம், ஜப்பானிய கலை, இயற்கை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினார்.