/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளாஸ்டிக் மின்னணு கழிவு சேகரிக்க முகாம்
/
பிளாஸ்டிக் மின்னணு கழிவு சேகரிக்க முகாம்
ADDED : செப் 12, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு, அடையாறு கஸ்துாரிபா ரெசிடன்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், அடையாறு, காந்தி நகர், குமாரராணி மீனா முத்தையா கல்லுாரியில், உலர் குப்பை சேகரிக்கும் நிகழ்ச்சி, நாளை மற்றும் 14ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைக்கும் குப்பை கழிவுகளான பிளாஸ்டிக் பொருட்கள், மின்னணு கழிவுகள், பழைய உடைகள், காலியான மாத்திரை அட்டைகள், எக்ஸ் - ரே படங்கள், காலணிகள், பேனா, பென்சில்கள் போன்ற அலுவலக பொருட்கள், பழைய நாளிதழ்கள், உடையாத கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் பெறப்படும் என, அந்த அமைப்பின் நிர்வாகி ஜனனி தெரிவித்துள்ளார்.