ADDED : செப் 11, 2025 04:35 AM
கொத்தனார் படுகாயம்
சூளைமேடு: அமைந்தகரை, மசூதி தெருவைச் சேர்ந்த கொத்தனார் இளங்கோவன், சூளைமேடு பகுதியில் ஒரு வீட்டின் மேற்கூரையை சீரமைக்கும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டிருந்தார். கால் இடறி, 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதை மாத்திரை
பறிமுதல்
மயிலாப்பூர்: மயிலாப்பூர் சிட்டி சென்டர் மால் அருகே, நின்றிருந்த மயிலாப்பூரைச் சேர்ந்த சந்தோஷ், 19, ரவிகுமார், 19, ஆகியோரை, நேற்று காலை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 83 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
தலைமறைவு
குற்றவாளிகள் கைது
மயிலாப்பூர்: பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் மணிகண்டன், 25, என்பவரை, 2013ல் மயிலாப்பூர் போலீசார் பிடித்தனர். ஜாமினில் வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், ஆக., 18ல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அவரை, கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அதேபோல், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட விக்னேஷ், 22, என்ற குற்றவாளியை, பூக்கடை போலீசார் கைது செய்து, சென்னை ஜார்ஜ்டவுன், 8வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.