/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 22ல் துவக்கம்
/
வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 22ல் துவக்கம்
வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 22ல் துவக்கம்
வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா 22ல் துவக்கம்
ADDED : செப் 20, 2025 12:53 AM

சென்னை : வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி விழா 22ம் தேதி துவங்குகிறது.
வடபழனி முருகன் கோவிலில், இந்தாண்டிற்கான நவராத்திரி விழா, 22ம் தேதி துவங்கி அக்., 1ம் தேதி வரை, 'சக்தி கொலு' எனும் பெயரில் விமரிசையாக நடக்க உள்ளது.
விழாவின்போது, தினமும் காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரையும், மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரையும் அம்மன் கொலு மண்டபத்தில், சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படும்.
மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினர் கொலுபாட்டு நடத்தப்ப டுகிறது. அதுமட்டுமல்லாமல், மாலை 6:00 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சிகள், இரவு 7:00 மணிக்கு நாசங்கீர்த்தனம், இசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்படுகிறது.
ஏக தின லட்சார்ச்சனை வரும், 28ம் தேதி மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை சிறப்பு திருமுறை பாராயணம், அடுத்த நாள் மாலை 4:15 மணிக்கு மகளிரின் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.
நவராத்திரி சிறப்பு நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு, 26ம் தேதி காலை 7:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணிவரையிலும் ஏகதின லட்சார்ச்ச னை நடக்க உள்ளது.
இதில், பங்கேற்க விரும்புவோர், கோவில் அலுவலகத்தில், 250 ரூபாய் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
கொலு பார்வை நேரம் கொலுவை காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 மணி வரையும் பார்வையிடலாம். கண்காட்சி நேரத்தில், ஆன்மிக வினாடி - வினா நடத்தப்படும்.
அதில் பங்கேற்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.