/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலையில் திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 15, 2024 12:39 AM

சென்னை, சென்னை மாநகராட்சி, 15 மண்டலங்களை உள்ளடக்கியது. அவற்றில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை சிறை பிடிக்க மண்டலத்திற்கு தலா ஒரு வாகனம் மட்டுமே உள்ளது.
போதுமான வாகனம் இல்லாததால், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க முடிவதில்லை. சாலையில் சுற்றித்தியும் மாடுகள் குறித்து பொதுமக்கள் மட்டுமின்றி, காவல் துறையைச் சேர்ந்தவர்களும், சம்பந்தப்பட்ட இடம், மாடுகளின் புகைப்படத்துடன், புகார் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சாலையில் திரியும் மாடுகள் தொடர்பாக தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, 4,237 மாடுகள் சிறை பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து, 92.63 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த, எட்டு நாட்களில் 42 மாடுகள் சிறை பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு 75,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆனால், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதும், அவற்றால் விபத்துகளும் தொடர்கிறது. எனவே மாடுகளை சிறை பிடிக்க கூடுதல் வாகனம் கொள்முதல் செய்வதுடன், ஆட்களையும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

