/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தடுப்பு இல்லாத வடிகால்வாய் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
தடுப்பு இல்லாத வடிகால்வாய் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
தடுப்பு இல்லாத வடிகால்வாய் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
தடுப்பு இல்லாத வடிகால்வாய் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 10, 2025 12:31 AM

கோயம்பேடு, கோயம்பேடு சந்தை - 'ஏ' சாலையில், மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளதுடன், போதிய தடுப்புகள் அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் கடந்து வருகின்றனர்.
கோயம்பேடு சந்தை வளாகத்தில், மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. அந்த வகையில், கோயம்பேடு சந்தை - பி மற்றும் ஏ சாலையின் இருபுறமும், புதிதாக வடிகால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதில், 'ஏ' சாலையில் அமைக்கப்பட்டு வரும் வடிகால்வாய் மூலம், காளியம்மன் கோவில் தெரு வழியாக, 100 அடி சாலைக்கு சென்று, கூவம் ஆற்றில் மழைநீரை வெளியேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த மழைநீர் வடிகால்வாய் பணி மந்தமாக நடந்து வருகிறது. அத்துடன், மழைநீர் வடிகால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது.
அத்துடன், தடுப்புகள் அமைக்கப்படாததால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, வடிகால்வாயின் இருபுறமும் பக்கவாட்டு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் எனவும், வடிகால்வாய் பணியை விரைவாக முடிக்க வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.