/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கும்மிடிப்பூண்டி தடத்தில் ஐந்து மின்சார ரயில்கள் ரத்து
/
கும்மிடிப்பூண்டி தடத்தில் ஐந்து மின்சார ரயில்கள் ரத்து
கும்மிடிப்பூண்டி தடத்தில் ஐந்து மின்சார ரயில்கள் ரத்து
கும்மிடிப்பூண்டி தடத்தில் ஐந்து மின்சார ரயில்கள் ரத்து
ADDED : செப் 11, 2025 04:28 AM
சென்னை, செப். 11-
எண்ணுார் - அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், இன்றும் நாளையும், சில மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், இரவு 10:35 மற்றும் 11:20, கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் இரவு 10:30 மணிக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாளை, சென்ட்ரல் - சூலுார்பேட்டை தடத்தில் அதிகாலை 4:15 மணிக்கும், கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் தடத்தில் அதிகாலை 3:50 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.
அதேநேரம், பயணியர் வசதிக்காக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், ஆறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.