/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டட கழிவு கொட்டினால் ரூ.5 லட்சம் அபராதம்
/
கட்டட கழிவு கொட்டினால் ரூ.5 லட்சம் அபராதம்
ADDED : டிச 19, 2025 05:12 AM
சென்னை: கட்டட கழிவுகளை முறையாக அகற்றாவிட்டால், 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநகராட்சியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி , அனைத்து கட்டுமான பொருட்கள், தோண்டப்பட்ட மண், கட்டடம் மற்றும் இடிபாட்டு கழிவு அனைத்தையும், கட்டுமான பணிகள் நடைபெறும் வளாகத்திற்குள் மட்டு மே சேமிக்க வேண்டும்.
பொது சாலைகள், நடைபாதைகள், சாலை ஓரங்களில் கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. விதிகளை மீறுவோர் மீது, அபராதம் விதிக்கப்படும்.
அதன்படி, 500 சதுர மீட்டர் முதல் 20,000 சதுர மீட்டர் வரையிலான கட்டட பரப்பளவிற்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேற்பட்ட கட்டட பரப்பளவிற்கு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், 500 சதுர மீட்டருக்கு குறைவான கட்டுமானங்களில், கட்டுமான கழிவுகள் பொறுப்புடன் கையாளப்பட்டு வருகிறது என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

