/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் திருட்டு ரூ.9 லட்சம் இழப்பீட்டு தொகை வசூல்
/
மின் திருட்டு ரூ.9 லட்சம் இழப்பீட்டு தொகை வசூல்
ADDED : செப் 19, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சோழிங்கநல்லுாரில், மின் திருட்டு தொடர்பாக, மின் வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, எட்டு மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், ஈடுபட்ட நபர்களிடம் இருந்து இழப்பீட்டு தொகையாக, 9.01 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப் பட்ட நுகர்வோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து, அதற்கு உரிய சமரச தொகையாக, 39,000 ரூபாயை செலுத்தி உள்ளனர்.
மின் திருட்டு தொடர்பான தகவல்களை, அமலாக்க பிரிவு செயற்பொறியாளரிடம், 9445857591 என்ற மொபைல் போன் எண்ணில் மக்கள் தெரிவிக்கலாம்.