/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை விரிவாக்கம்: 60 கட்டடங்கள் அகற்றம்
/
சாலை விரிவாக்கம்: 60 கட்டடங்கள் அகற்றம்
ADDED : செப் 19, 2025 12:25 AM

குன்றத்துார் :குன்றத்துாரில், சாலை விரிவாக்கம் பணிக்காக, 144 கட்டடங்களை இடித்து அகற்றும் பணிகள், நேற்று துவங்கின.
தாம்பரம், பூந்தமல்லி, போரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் இணையும் பகுதியாக, குன்றத்துார் உள்ளது.
குறுகிய சாலையால், குன்றத்துாரில் தினமும் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
நெரிசலை குறைக்க, குன்றத்துார் பேருந்து நிலையத்தில் இருந்த அரசு கட்டடம் இடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த அம்பேத்கர் சிலையை இடமாற்றி அமைத்து, சாலை அகலப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, குன்றத்துார் தேரடி முதல் காவல் நிலையம் வரை, 750 மீட்டர் நீளத்திற்கு இரண்டு வழியில் இருந்து, நான்கு வழியாக சாலை அகலப் படுத்தப்பட உள்ளது.
இதற்காக, சாலையோரம் உள்ள கடைகள், வீடுகள் என, 144 கட்டடங்களை இடித்து அகற்றும் பணிகளை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும மான சி.எம்.டி.ஏ., மற்றும் நெடுஞ்சாலை துறையினர், நேற்று துவங்கினர்.
முதல் கட்டமாக, நேற்று 60 கட்டடங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. எஞ்சியுள்ள கட்டடங்கள், அடுத்த சில நாட்களில் இடித்து அகற்றப் படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.