ADDED : டிச 31, 2025 10:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் வைதேகி.
இந்தியாவின் ஆமதாபாத்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி, சக வீராங்கனை பிரதியூஷாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-4 என வென்ற வைதேகி, அடுத்த செட்டை 6-1 என வசப்படுத்தினார்.
முடிவில் வைதேகி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் செய்லி, சந்தீப்தி, பூஜா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சோஹா, தம்ஹன்கர், தேபாஸ், அரோரா (அமெரிக்கா) ஜோடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறின.

