/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
பெங்களூரு ஓபனில் பிரஜ்வல் தேவ்
/
பெங்களூரு ஓபனில் பிரஜ்வல் தேவ்
ADDED : டிச 31, 2025 08:45 PM

பெங்களூரு: பெங்களூரு ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் பிரஜ்வல் தேவ் பங்கேற்கிறார்.
பெங்களூருவில், வரும் ஜன. 5-11ல் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் 10வது சீசன் நடக்க உள்ளது. இதன் மொத்த பரிசுத் தொகை ரூ. 2 கோடி. இந்தியா சார்பில் சுமித் நாகல், ஆர்யன் ஷா, தக்சினேஷ்வர் சுரேஷ் ('வைல்டு கார்டு') பங்கேற்கின்றனர்.
இத்தொடரில் பங்கேற்க இந்திய வீரர் பிரஜ்வல் தேவுக்கு 29, 'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. மைசூருவை சேர்ந்த பிரஜ்வல், கடந்த மாதம் ஒடிசா மாநிலம் புவவேஸ்வரில் நடந்த ஐ.டி.எப்., தொடரின் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதுவரை ஒரு ஏ.டி.பி., சேலஞ்சர், 10 ஐ.டி.எப்., பட்டம் வென்றுள்ளார்.
பிரஜ்வல் கூறுகையில், ''பெங்களூரு ஓபனில் பங்கேற்க சிறப்பு அனுமதி கிடைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். சொந்த ஊரில் விளையாட இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. இத்தொடரில் கிடைக்கும் அனுபவம், சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட உதவும்,'' என்றார்.

