/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ஐ.டி.எப்., டென்னிஸ்: வைதேகி 'சாம்பியன்'
/
ஐ.டி.எப்., டென்னிஸ்: வைதேகி 'சாம்பியன்'
ADDED : டிச 28, 2025 11:19 PM

சோலாபுர்: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையரில் இந்திய வீராங்கனை வைதேகி சவுத்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.
மகாராஷ்டிராவின் சோலாபுர் நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் வைதேசி சவுத்ரி 25, ஜப்பானின் மிச்சிகா ஒஜெகி மோதினர். முதல் செட்டை 3-6 என இழந்த வைதேகி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டிலும் மீண்டும் அசத்திய இவர் 6-4 என வென்றார்.
முடிவில் வைதேகி 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். இது, வைதேகி கைப்பற்றிய 4வது ஐ.டி.எப்., ஒற்றையர் பட்டம்.
இரட்டையரில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, வைஷ்ணவி அத்கர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

