/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் ஈஷா சிங்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
/
தங்கம் வென்றார் ஈஷா சிங்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் ஈஷா சிங்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் ஈஷா சிங்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்
ADDED : செப் 13, 2025 09:47 PM

நிங்போ: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம் வென்றார்.
சீனாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்'/'பிஸ்டல்') தொடர் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ரிதம் சங்வான் (578.22 புள்ளி), ஈஷா சிங் (578.16) முறையே 7, 8வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை சுரபி ராவ் (568.9 புள்ளி, 25வது இடம்) பைனல் வாய்ப்பை இழந்தார்.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஈஷா சிங் (242.6), 0.1 புள்ளி வித்தியாசத்தில் சீனாவின் கியான்சுன் யோவை (242.5) முந்தி முதலிடம் பிடித்தார். உலக கோப்பை அரங்கில் முதன்முறையாக தங்கம் வென்ற ஈஷா சிங், இத்தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத்தந்தார். ரிதம் சங்வான், 179.2 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்தார்.
பதக்கப்பட்டியலில் இந்திய அணி, 5வது இடத்தை ஜெர்மனியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. முதலிடத்தில் சீனா (2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம்) உள்ளது.