/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சுப்மன் கில்லுக்கு இடமில்லை: இந்திய மாற்று அணியில்
/
சுப்மன் கில்லுக்கு இடமில்லை: இந்திய மாற்று அணியில்
சுப்மன் கில்லுக்கு இடமில்லை: இந்திய மாற்று அணியில்
சுப்மன் கில்லுக்கு இடமில்லை: இந்திய மாற்று அணியில்
ADDED : டிச 25, 2025 09:13 PM

புதுடில்லி: முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட, 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய மாற்று கனவு அணியில் சுப்மன் கில் இடம் பெறவில்லை.
இந்தியா, இலங்கையில், 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் (2026, பிப். 7 - மார்ச் 8) நடக்கவுள்ளது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு, துவக்க வீரர் சுப்மன் கில் தேர்வு செய்யப்படவில்லை. ஆசிய கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட இவர், மோசமான 'பார்ம்' காரணமாக நீக்கப்பட்டார். இந்த ஆண்டு சுப்மன் விளையாடிய 15 சர்வதேச 'டி-20' போட்டியில், 291 ரன் மட்டும் (சராசரி 24.25, 'ஸ்டிரைக்ரேட்' 137.26) எடுத்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய மாற்று அணியை அறிவித்தார். இதில் சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்கவில்லை. ருதுராஜ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷாப் பன்ட் இடம் பெற்றுள்ளனர்.
மாற்று 'கனவு' அணி: ருதுராஜ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷாப் பன்ட், ஜிதேஷ் சர்மா, நிதிஷ் குமார், குர்னால் பாண்ட்யா, தீபக் சகார், யுவேந்திர சகால், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, முகமது சிராஜ், லோகேஷ் ராகுல்.

