/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு: 'டி-20' உலக கோப்பை தொடருக்கு
/
ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு: 'டி-20' உலக கோப்பை தொடருக்கு
ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு: 'டி-20' உலக கோப்பை தொடருக்கு
ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு: 'டி-20' உலக கோப்பை தொடருக்கு
ADDED : டிச 31, 2025 08:51 PM

காபுல்: 'டி-20' உலக கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டார்.
இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் (பிப். 7 - மார்ச் 8) நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஆப்கானிஸ்தான் அணி, 'டி' பிரிவில் கனடா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.
அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் 27, கேப்டனாக நீடிக்கிறார். இப்ராஹிம் ஜத்ரன் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட நவீன் உல்-ஹக் அணிக்கு திரும்பினார். இவர், கடைசியாக 2024, டிசம்பரில் சர்வதேச போட்டியில் விளையாடினார். 'ஆல்-ரவுண்டர்' குல்பதின், சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஆப்கன் அணி: ரஷித் கான் (கேப்டன்), இப்ராஹிம் ஜத்ரன் (துணை கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), செடிகுல்லா அடல், டார்விஷ் ரசோலி, ஷாஹிதுல்லா கமால், அஸ்மதுல்லா உமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, நுார் அகமது, முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், பசல் ஹக் பரூக்கி, அப்துல்லா அகமத்சாய்.
மாற்று வீரர்கள்: காசன்பர், இசாஜ் அகமத்சாய், ஜியா உர் ரஹ்மான் ஷாரிபி.

