/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பாரதியாரின் பன்முக லட்சியங்களை இளைஞர்கள் தழுவிக் கொள்ள வேண்டும்'
/
'பாரதியாரின் பன்முக லட்சியங்களை இளைஞர்கள் தழுவிக் கொள்ள வேண்டும்'
'பாரதியாரின் பன்முக லட்சியங்களை இளைஞர்கள் தழுவிக் கொள்ள வேண்டும்'
'பாரதியாரின் பன்முக லட்சியங்களை இளைஞர்கள் தழுவிக் கொள்ள வேண்டும்'
ADDED : டிச 13, 2025 05:24 AM

புதுச்சேரி: பாரதி அறக்கட்டளையின் வெள்ளி விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி, பாரதி மக்கள் மன்றத்தை துவக்கி வைத்தார்.
பாரதியாரின் 144வது பிறந்தநாள், பாரதி அறக்கட்டளையின் வெள்ளி விழா, ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பாரதி நினைவகத்தின் எதிரில் கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினர், முதல்வர் ரங்கசாமி, பாரதி அறக்கட்டளையின் புதிய மக்கள் தொடர்பு முன்னெடுப்பான பாரதி மக்கள் மன்றத்தை துவங்கி வைத்தார்.
முதல்வர் பேசுகையில், 'நாம் பாரதியைப் போல் வாழ முயற்சிக்க வேண்டும். விடுதலைக்கு முன்பே ஒரு விடுதலையடைந்த சமூகத்திற்கான அவரது முழுமையான தொலைநோக்குப் பார்வையை நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அவரின் தீவிரமான தேசியம், முற்போக்கான பெண்கள் அதிகாரம், அசைக்க முடியாத சமூக நீதி, ஆழமான ஆன்மிகம் ஆகியவை துடிப்பான கலவையாக இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் பாரதியாரின் பன்முக லட்சியங்களைத் தழுவிக்கொள்ள வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் சுப்ரமணிய பாரதியின் எள்ளுப் பே ரன் நிரஞ்சன் பாரதி, புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தரணிக்கரசு, பாரதி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ராஜகோபால் சுவாமி, செல்வநாதன், தமிழறிஞர்கள், கவிஞர்கள், பாரதி ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பாரதியின் 150வது பிறந்தநாள் விழாவிற்கான ஆயத்தக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

