/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடிப்படை மொழியறிவு கணிதத்திறன் போட்டி
/
அடிப்படை மொழியறிவு கணிதத்திறன் போட்டி
ADDED : டிச 13, 2025 05:27 AM

புதுச்சேரி: பள்ளிகளுக்கு இடையிலான அடிப்படை மொழித்திறன், கணிதத்திறன் போட்டியில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
புதுச்சேரி கல்வித்துறையின் கீழ் இயங்கும் வட்டம் ஒன்றின் உள்ள இருபது பள்ளிகளுக்கு இடையிலான அடிப்படை மொழித்திறன் மற்றும் கணிதத்திறன் போட்டிகள் பெத்துச்செட்டிப்பேட்டை தியாகி நடேசன் அரசு துவக்கப் பள்ளியில் நேற்று நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக மாநில திட்ட இயக்குநர் எழில் கல்பனா, கல்வித்துறை பெண் கல்வி இணை இயக்குநர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு போட்டிகளை துவங்கி வைத்தனர். வட்டம் ஒன்றின் பள்ளித் துணை ஆய்வாளர் அனிதா வரவேற்றார். ஒவ்வொரு பள்ளிகளிலிருந்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்கள் வட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் திருக்குறள் ஒப்புவித்தல், பாடல் பாடுதல், கதை கூறுதல் மூலம் மாணவர்களின் மொழித்திறன், வாய்ப்பாடு ஒப்புவித்தல், மனக்கணிதம் மூலம் கணிதத்திறன் மதிப்பிடப்பட்டது.
நடுவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தமயந்தி ஜாக்குலின், இளங்கோவன், ராமதாஸ், விஜயலட்சுமி, சரஸ்வதி தலைமையில் ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.

