/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'மணமகன் தாடியுடன் இருந்தால் கல்யாணத்துக்கு வர மாட்டோம்'
/
'மணமகன் தாடியுடன் இருந்தால் கல்யாணத்துக்கு வர மாட்டோம்'
'மணமகன் தாடியுடன் இருந்தால் கல்யாணத்துக்கு வர மாட்டோம்'
'மணமகன் தாடியுடன் இருந்தால் கல்யாணத்துக்கு வர மாட்டோம்'
ADDED : மே 09, 2025 02:37 AM
காரைக்கால்:இன்றைய இளைஞர்களிடம், 'தாடி' வளர்ப்பது தனி மோகமாகி விட்டது. அதிலும், திருமணத்தின் போது கூட, தாடியை பலரும் எடுப்பதில்லை. இந்நிலையில், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மேடு மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், 'திருமணத்தின் போது மணமகன் தாடி வைத்திருந்தால் அந்த திருமண விழாவில் கிராம பஞ்சாயத்தார் யாரும் கலந்து கொள்வதில்லை' என, தடாலடியாக முடிவெடுத்துள்ளனர்.
மேலும், திருமண நிகழ்ச்சியில் மணமகளுக்கு சம்மதம் இருந்தால் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். இது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், மணமகனுக்கு தாடி இருக்கக் கூடாது என்ற பஞ்சாயத்தாரின் தீர்மானம், உள்ளூர் இளைஞர்களை வேதனையில் தள்ளியுள்ளது.