/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போராட்ட களத்தில் தேர்வு தாள்களை திருத்திய ஆசிரியர்கள்
/
போராட்ட களத்தில் தேர்வு தாள்களை திருத்திய ஆசிரியர்கள்
போராட்ட களத்தில் தேர்வு தாள்களை திருத்திய ஆசிரியர்கள்
போராட்ட களத்தில் தேர்வு தாள்களை திருத்திய ஆசிரியர்கள்
ADDED : டிச 27, 2025 05:20 AM

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்த ஆசிரியர்கள் 3வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித் துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி மொழி ஆசிரியர்கள், கவுரவ பாலசேவிகாக்கள் என 270க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி, பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.
இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதை கண்டித்து, புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில், பணி நிரந்தரம் செய்யக்கோரி 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்வு தாளை திருத்தியபடி தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர்.