/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்
/
விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 27, 2025 05:22 AM

புதுச்சேரி: லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபை நோக்கி பைக் பேரணி நடத்த விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம், நெட்டப்பக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. அதன் தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ரவி வரவேற்றார். கூட்டத்தில் பொருளாளர் ஜெயராமன் துணைத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், பாஸ்கர், துணைச் செயலாளர்கள் ஆதிமூலம், பழனி, பகுதி செயலாளர் ஜெயகோபி, ஜீவானந்தம், அகிலன், ஆறுமுகம், ராஜாராமன், முத்துமல்லா, சக்திவேல், மணிகண்ணன், கார்த்திக், அருள்ராஜ், நடராஜ், அருள்மொழி மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதுச்சேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்துக்கும் ஐந்து என்ற விகிதத்தில் உடனே திறக்க வேண்டும். லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டபை நோக்கி விவசாயிகள் பைக் பேரணி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

