/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோகா போட்டியில் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர் முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து

ADDED : டிச 25, 2025 05:38 AM

புதுச்சேரி: யோகா விளையாட்டு போட்டியில், சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன் பட்டத்தை வென்ற மாணவர் அகில்யோகன், முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றார்.
பாண்டிச்சேரி யோகா அன்ட் யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் மற்றும் பீஸ் அன்ட் கேர் யோகா சென்டர் சார்பில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையிலான யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது.
இதில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 600க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன் பட்டத்தை புதுச்சேரியைச் சேர்ந்த அகில் யோகன் வென்றார். இவர், புதுச்சேரி சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை, சந்தித்து, விருதினைக் காண்பித்து, வாழ்த்துப் பெற்றார்.