/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து வழக்கில் ஜி.எஸ்.டி.,யில் பல கோடி மோசடி திட்டமிட்டு கொடுத்த மாஜி ஐ.எப்.எஸ்., அதிகாரி கைது ஜி.எஸ்.டி., அதிகாரியிடம் தொடர் விசாரணை அடுத்தடுத்த அம்பலத்தால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

UPDATED : டிச 25, 2025 05:49 AM
ADDED : டிச 25, 2025 05:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் ஜி.எஸ்.டி.,யில் மோசடி செய்ய ஏற்பாடு செய்து கொடுத்த மாஜி ஐ.எப்.எஸ்., அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மத்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுது. விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன்,42; என்பவர் பிரபல நிறுவனங்களின் பெயரில், அதிகமாக மற்றும் அதிக விலை கொண்ட மருந்துகளை தயாரித்து நாடுவதும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சன்பார்மா நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து மேட்டுப்பாளையம், திருபுவனைப்பாளையம், தவளக்குப்பம், இடையார்பாளையம், ஊசுடு உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த தொழிற்சாலைகள், குடோன்களை போலீசார் சோதனை நடத்தி ரூ.200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப் பொருட்கள், மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். ராஜா வீட்டில் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், தங்க, வைர நகைகள் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து ராஜா, ராணா, மெய்யப்பன், விவேக் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு எஸ்.பி., நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றப்பட்டது. இக்குழுவினர், சிறையில் அடைக்கப்பட்ட ராஜாவை கடந்த 18 ம் தேதி காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், ராஜாவின் பங்குதாரரான என்.ஆர்.காங்., பிரமுகர் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பதால், வழக்கை சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., விசாரணைக்கு கடந்த 22ம் தேதி கவர்னர் பரிந்துரை செய்தார். அவர்கள் ஜனவரி முதல் வாரத்தில் விசாரணையை துவங்க உள்ளனர்.
இதற்கிடையே போலி மருந்து விவகாரத்தில் ஜி.எஸ்.டி., கட்டியது குறித்து ராஜாவிடம் விசாரித்தபோது, விவேக் பெயரில் முத்திரையர்பாளையம் மற்றும் ஊசுடு முகவரியில் உரிமம் பெற்ற அமன் பார்மசி மற்றும் மீனாட்சி பார்மசி ஆகிய ஏஜென்சிகள் பெயரில் ஜி.எஸ்.டி.,யாக பெரும் தொகை கட்ட வேண்டி இருந்தது. அதனை குறைப்பதற்காக, புதுச்சேரி வனத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு ஐ.எப்.எஸ்., அதிகாரியான சத்தியமூர்த்தி உதவியை நாடியதும், அதன்பேரில் அவர் ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் அதிகாரியின் உதவியுடன் ஜி.எஸ்.டி., தொகுயை பெரிய அளவில் குறைத்ததும், அதற்காக ராஜா, சத்தியமூர்த்திக்கு ரூ.12 கோடி பணம் கொடுத்தது தெரிய வந்தது. அதற்கான ஆவணங்களும் ஏற்கனவே சிக்கியது.
அதன்பேரில், தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தியை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிடித்து விசாரித்தனர். பின்னர் நேற்று இரவு 7:30 மணிக்கு சத்தியமூர்த்தியை, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த மோசடி தொடர்பாக புதுச்சேரி ஜி.எஸ்.டி, அலுவலக கண்காணிப்பு அதிகாரியை கைது செய்திட, கவர்னரின் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஆவணங்கள் பறிமுதல்
போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ஒரு குடோன் வைத்திருப்பது தெரிய வந்தது. அதன்பேரில், நேற்று மாலை போலீசார், ராஜாவை கோட்டக்குப்பத்திற்கு அழைத்து சென்று, அவர் முன்னிலையில் அந்த குடோனில் இருந்த முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு வந்தனர்.