/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
/
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
ADDED : டிச 25, 2025 05:44 AM

புதுச்சேரி: புதுச்சேரி, மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கம், நேற்று பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட்டை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கம் கார்டினல் இல்லத்தில் புதுச்சேரி, கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட்டை நேற்று சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்தார்.
சந்திப்பின் போது, வி.பி.ஆர்., அறக்கட்டளையின் இயக்குனர் விஜயானந்த் மற்றும் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்த கண்ணன், பெத்தி செமினார் பள்ளியின் முதல்வர் பாஸ்கல் ராஜ், பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து பா.ஜ., கட்சியில் உள்ள கிரிஸ்துவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

