/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெற்பயிரில் அதிக மகசூல் பெற பயிர் மேலாண் தொழில்பயிற்சி, இடுபொருள்கள் வழங்கல்

ADDED : டிச 25, 2025 05:33 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூனை சேர்ந்த அட்டவணை இன விவசாயிகள், நெல்லில் அதிக மகசூல் பெறும் வகையில், இடுபொருள்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆகியவை இணைந்து தட்டாஞ்சாவடியில் உள்ள விவசாயத் துறையின் உழவர்கள் பயிற்சி மையத்தில், விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்வை நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு, பேராசிரியை பகவதி அம்மாள் வரவேற்றார். அமைச்சர்கள் நமச்சிவாயம் ,ஜெயக்குமார், அரசு செயலர் மற்றும் இயக்குனர் சவுத்ரி முகமது யாசின் கலந்து கொண்டு, 70 அட்டவனையின விவசாயிகளுக்கு நெல்லில் அதிக மகசூல் பெறும் வகையில் 6000 ரூபாய் மதிப்பிலான வேளாண் இடுபொருள்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினர்.
கூடுதல் வேளாண் இயக்குனர் ஜெயசங்கர் வேளாண் வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்களிப்பு குறித்து பேசினார். வேளாண் கல்லுாரி முதல்வர் சங்கர் மண்வளம் குறித்து பேசினார். உதவி பேராசிரியர் ராஜ்குமார் தொகுப்புரையாற்றினார். இணை பேராசிரியர் குமரவேல் நன்றி கூறினார்.