/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ஆபரேஷன் 'த்ரிஷூல்': ஆயுதங்கள் வைத்திருந்த 4 பேர் கைது
/
புதுச்சேரியில் ஆபரேஷன் 'த்ரிஷூல்': ஆயுதங்கள் வைத்திருந்த 4 பேர் கைது
புதுச்சேரியில் ஆபரேஷன் 'த்ரிஷூல்': ஆயுதங்கள் வைத்திருந்த 4 பேர் கைது
புதுச்சேரியில் ஆபரேஷன் 'த்ரிஷூல்': ஆயுதங்கள் வைத்திருந்த 4 பேர் கைது
ADDED : டிச 31, 2025 05:01 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் போலீசார் மேற்கொண்ட 'த்ரிஷூல்' ஆபரேஷன் முடிவில் மொத்தம் 185 குற்ற பின்னணி கொண்ட நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்.
சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்துவதற்காக, புதுச்சேரி யூனியன் பிரதேச போலீசார் நேற்று அதிகாலை ஆபரேஷன் 'த்ரிஷூல்' நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை கட்டுப்படுத்த நடந்த இந்த நடவடிக்கையானது, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ரவுடிகள் மற்றும் வரலாற்றுச் சான்று கொண்ட குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு, பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சினியர் எஸ்.பி., (சட்டம் & ஒழுங்கு) கலைவாணன், தலைமையில் 280 போலீசார் ஆபரேஷன் த்ரிஷூல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குற்றபின்னணி உள்ளவர்களின் வீடுகளில் முறையான அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 'த்ரிஷூல்' ஆபரேஷன் முடிவில் மொத்தம் 185 குற்ற பின்னணி கொண்ட நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். 4 பேர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டதது. பி.என்.எஸ்.எஸ்., சட்டத்தின் கீழ் 48 நபர்கள் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

